தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY : ஆபரணத் தங்கம் விலை கூடியது..!

தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விலையில் மாற்றம் ஏற்படவில்லை.

தங்கம் விலை கடந்த 24-ந்தேதி வரை குறைந்து வந்த நிலையில், 25-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏற்றம் கண்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் மீண்டும் விலை குறைந்தது.

அதன் தொடர்ச்சியாக 2-வது நாளாக நேற்றும் விலை சரிந்து இருந்தது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்தது.

இதனைத் தொடர்ந்து மாலையிலும் விலை மேலும் குறைந்தது. மாலையில் கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் என மொத்தம் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அந்த வகையில் கடந்த 2 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.330-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 640-ம் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, இன்று காலை தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. இதனால் தங்கம் ஒரு கிராம் ரூ.13,900-க்கும் சவரன் ரூ.1,11,200-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று மாலை உயர்ந்துள்ளது. அந்த வகையில், ஒரு கிராம் தங்கம் ரூ.14,100க்கும், சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்து ரூ.1,12,800க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையிலும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

29-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200

28-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,800

27-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,840

26-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

25-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

29-04-2026- ஒரு கிராம் ரூ.260

28-04-2026- ஒரு கிராம் ரூ.265

27-04-2026- ஒரு கிராம் ரூ.270

26-04-2026- ஒரு கிராம் ரூ.270

25-04-2026- ஒரு கிராம் ரூ.270