தங்கம் விலை கடந்த 20-ந்தேதிக்கு பிறகு விலை படிப்படியாக குறைந்து கொண்டே வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வருகிறது.
சென்னையில் நேற்று முன்தினம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தை போல வெள்ளி விலையும் உயர்ந்தது.
இந்நிலையில், வாரத் தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 240 உயர்ந்து சவரன் ரூ.1,13,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதாவது, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 30 உயர்ந்து சவரன் ரூ.14,230-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி ரூ.270க்கு ஒரு கிலோ ரூ.2.70 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
25-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600
24-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,800
23-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,280
22-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,000
21-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,400
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
25-04-2026- ஒரு கிராம் ரூ.265
24-04-2026- ஒரு கிராம் ரூ.265
23-04-2026- ஒரு கிராம் ரூ.270
22-04-2026- ஒரு கிராம் ரூ.275
21-04-2026- ஒரு கிராம் ரூ.275