சென்னை:
தங்கம் விலை கடந்த 24-ந்தேதி வரை குறைந்து வந்த நிலையில், 25-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏற்றம் கண்டது. இதனையடுத்து நேற்று முன்தினம் மீண்டும் விலை குறைந்தது. அதன் தொடர்ச்சியாக 2-வது நாளாக நேற்றும் விலை சரிந்து இருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 100-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து விற்பனை ஆனது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் குறைந்தது.
இதனைத் தொடர்ந்து மாலையிலும் விலை மேலும் குறைந்தது. மாலையில் கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் என மொத்தம் நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் கடந்த 2 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.330-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 640-ம் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. இதனால் தங்கம் ஒரு கிராம் ரூ.13,900-க்கும் சவரன் ரூ.1,11,200-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளி விலையிலும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
29-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200
28-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,800
27-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,840
26-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600
25-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600
29-04-2026- ஒரு கிராம் ரூ.260
28-04-2026- ஒரு கிராம் ரூ.265
27-04-2026- ஒரு கிராம் ரூ.270
26-04-2026- ஒரு கிராம் ரூ.270
25-04-2026- ஒரு கிராம் ரூ.270