தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY : 3-வது நாளாக குறைந்த தங்கம் விலை- எவ்வளவு தெரியுமா?

நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 650-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னை:

தங்கம் விலை ஏற்ற-இறக்கத்துடன் நீடிக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் விலை குறைந்த நிலையில், 2-வது நாளாக நேற்றும் விலை சரிந்து காணப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 730-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது.

நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 650-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தங்கம் விலை மூன்றாவது நாளாக இன்றும் குறைந்துள்ளது. அதன்படி, தங்கம் கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.14,500-க்கும் சவரனுக்கு 1200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலையை போல வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.285-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

27-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,200

26-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,840

25-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,240

24-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,840

23-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,840

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

27-05-2026- ஒரு கிராம் ரூ.290

26-05-2026- ஒரு கிராம் ரூ.295

25-05-2026- ஒரு கிராம் ரூ.295

24-05-2026- ஒரு கிராம் ரூ.295

23-05-2026- ஒரு கிராம் ரூ.295