தங்கம், வெள்ளி இறக்குமதி வரியை மத்திய அரசு இன்று 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிரடியாக உயர்த்தியது. இந்த வரி உயர்வினால் தங்கம், வெள்ளி விலை என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
இதனால் இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன்படி, கிராமுக்கு 1070 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,400 -க்கும் சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,23,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.15ஆயிரத்துக்கும் சவரனுக்கு 3200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.
தங்கத்தைப் போலவே வெள்ளியும் விலையும் காலையில் உயர்ந்து மாலையில் குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 320 ரூபாய்க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காலையில் வெள்ளி விலை 30ஆயிரம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.