தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY : மாத தொடக்கத்தில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை- இன்றைய நிலவரம்

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

சென்னை:

தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கத்துடனேயே நீடிக்கிறது. ஓரிரு நாட்கள் விலை ஏறுவதும், பின்னர் சரிவதுமான நிலையிலேயே பயணித்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் கடந்த வாரம் முழுவதும் ஏற்ற, இறக்கத்துடன் நீடித்து வந்த தங்கம் விலை வார இறுதிநாளான சனிக்கிழமை சவரன் ஒரு லட்சத்து 17ஆயிரத்து 40 ரூபாய்க்கும் ஒரு கிராம் 14,630-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், மாத தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து கிராம் 14,500 ரூபாய்க்கும் சவரனுக்கு 1040 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 16ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

31-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,040

30-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,040

29-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,800

28-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,000

27-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,200

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

31-05-2026- ஒரு கிராம் ரூ.290

30-05-2026- ஒரு கிராம் ரூ.290

29-05-2026- ஒரு கிராம் ரூ.290

28-05-2026- ஒரு கிராம் ரூ.285

27-05-2026- ஒரு கிராம் ரூ.290