சென்னையில் இன்று காலை தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்த நிலையில், தற்போது ரூ.1,480 குறைந்துள்ளது. காலையில் கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.14,950க்கும், ஒரு சவரன் ரூ. 1,19,600க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது கிராமுக்கு ரூ.185 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,765க்கும், ஒரு சவரன் ரூ.1,18,120க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை காலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் 305க்கும், ஒரு கிலோ ரூ.3,05,000 விற்பனை செய்யப்பட்டது. தற்போது வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனையாகிறது.