ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜி.கே.வாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். 
தமிழக செய்திகள்

போதை- வன்முறை கலாசாரத்திற்கு இளைஞர்கள் இடம் கொடுக்கக்கூடாது: ஜி.கே. வாசன்

தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக மாற்றம் ஏற்பட்டு உள்ளது. மக்களின் இந்த விருப்பத்தை வரவேற்போம். மாற்றங்கள் தொடர வேண்டும் என்றார்.

சுதந்திரத்தின் பெருமையையும், தியாகிகள் செய்த தியாகத்தையும் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு இளம் தலைமுறையினரிடம் இருக்கிறது.

80-வது சுதந்திர தினத்தையொட்டி ஆழ்வார்பேட்டையில் உள்ள த.மா.கா. தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜி.கே.வாசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், ராணி கிருஷ்ணன் நம்பி, விடியல் சேகர், சக்தி வடிவேல், கோவிந்த சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். மக்கள் தலைவர் மூப்பனார் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.

பின்னர் ஜி.கே. வாசன் நிருபர்களிடம் கூறும்போது,

சுதந்திரத்தின் பெருமையையும், தியாகிகள் செய்த தியாகத்தையும் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு இளம் தலைமுறையினரிடம் இருக்கிறது. இளைய தலைமுறையினர் போதை, வன்முறைக் கலாச்சாரத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது. தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக மாற்றம் ஏற்பட்டு உள்ளது. மக்களின் இந்த விருப்பத்தை வரவேற்போம். மாற்றங்கள் தொடர வேண்டும் என்றார்.

சிந்தாதிரிப்பேட்டையில் த.மா.கா சார்பில் வட்ட தலைவர் பி.அழகுவேல் தலைமையில் மாநில பொது செயலாளர் முனவர் பாட்ஷா தேசிய கொடியேற்றினார்.

மாநில கொள்கை பரப்பு செயலாளர் வி.எம்.அரவணன் இனிப்புகள் வழங்கினார். இதில் சர்கிள் தலைவர் என்.ஆர்.டி.தயாளன், கே.சந்தானம், புகழேந்தி, ரெக்ஸ் ஜெகன், கிருஷ்ணன், ஆர்.எஸ்.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.