சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் அந்த நேரத்தில் எதிரே வேறு ஏதேனும் வாகனங்கள் வந்தனவா என்ற கோணத்திலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டியை சேர்ந்த வடிவேல்-பவானி தம்பதியரின் 2-வது மகள் (7).
கடந்த 12-ந் தேதி அதிகாலை சிறுமி மாயமானார். இதுதொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் 10 தனிப்படைகளுடன் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பிக்கள் வேல்முருகன், கீதா தலைமையிலான போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் பெற்றோர், பாட்டி, சகோதரி, உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் சந்தேகத்தின் பேரில் பிரபல ரவுடி, அவரது நண்பர்கள் மற்றும் கரும்பு ெவட்டும் ெதாழிலாளி என 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் இதுவரை சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நாமக்கல் சேந்தமங்கலம் அருகே தத்தகிரி முருகன் கோவில் பகுதியில் சிறுமியை பார்த்ததாக பெண் சமையலர் ஒருவர் தெரிவித்தார்.
இதையடுத்து நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் அங்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறுமியை பார்த்ததாக கூறப்பட்ட முருகன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
சி.பி.சி.ஐ.டி. போலீசாரை தவிர சிறுமியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உளவு பிரிவுகளான ஓ.சி.ஐ.யூ., எஸ்.பி.சி.ஐ.டி. மற்றும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உளவு தனிப்பிரிவு போலீசாரும் களத்தில் இறங்கி தேடி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வில்லுப்பாட்டுக் குழுவினரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
வள்ளலார் சன்மார்க்க சங்கம் சார்பில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் புருஷோத்தமன் மற்றும் அவரது குழுவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரிடம் டி.எஸ்.பி. வேல்முருகன் தலைமையிலான சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
சிறுமியின் பிறந்தநாளான அக்டோபர் 11-ந் தேதி நள்ளிரவு 12.45 மணியளவில் சிறுமியின் வீட்டைக் கடந்து இந்த வில்லுப்பாட்டு குழுவினரின் வாகனங்கள் சென்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் கண்டாச்சிபுரத்தில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மினி லாரி, மினி வேன் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர்களிடம், அந்த நள்ளிரவு நேரத்தில் சிறுமியின் வீட்டின் அருகே வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததா, யாரேனும் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தார்களா? என விசாரணை நடத்தினர்.
மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் அந்த நேரத்தில் எதிரே வேறு ஏதேனும் வாகனங்கள் வந்தனவா என்ற கோணத்திலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.