தமிழக செய்திகள்

தமிழ்நாடு, புதுச்சேரி காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக குலாம் அகமது மீர் நியமனம்!

பிரகாஷ் ஜோஷி மேற்கு வங்கத்திற்கான காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புதிய மேலிடப் பொறுப்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மீர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

மேலிட பொறுப்பாளராக இருந்த கிரிஷ் சோடங்கர் கோவா மாநில தலைவராக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த நியமனம் போடப்பட்டுள்ளது.

குலாம் அகமது மீர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் ஆவார். இவர் அம்மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

பிரகாஷ் ஜோஷி மேற்கு வங்கத்திற்கான காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.