தமிழக செய்திகள்

ஜெம் வீரமணி வழக்கு - மேலும் ஒருவர் கைது!

இந்த வழக்குகளில் 5 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணி வழக்கில், அவரது வீட்டுக் காவலாளி சீனிவாசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்மூலம் ஜெம் வீரமணி தொடர்பான வழக்குகளில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 சிறுமிகள் அளித்த புகார்களின் அடிப்படையில், ஜெம் வீரமணிமீது தற்போதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றைய (நவ.1) கைதுடன் சேர்த்து எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது.

குழந்தைகள் ஜெம் வீரமணி வீட்டிற்கு வருவது தெரிந்தும் காவல்துறைக்கு தகவல் அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்குகளில் விசாரணையை விரைவில் முடித்து, நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில், இந்த கைது நடவடிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT