தமிழக செய்திகள்

காயத்ரி ரகுராம் புகாரின் பேரில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு

காயத்ரி ரகுராம் சென்னை ‘சைபர் கிரைம்' போலீசாருக்கு ‘ஆன்லைன்' வழியாக புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார். பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாபு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

சென்னை:

தமிழக பா.ஜ.க.வில் இருந்து விலகிய நடிகை காயத்ரி ரகுராம் சென்னை 'சைபர் கிரைம்' போலீசாருக்கு 'ஆன்லைன்' வழியாக புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்தார்.

அதில் அவர், ராணிப்பேட்டை மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாபு தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை பரப்பி வருகிறார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.

அவருடைய புகார் மனுவை 'சைபர் கிரைம்' போலீசார் ஆராய்ந்தனர்.

இந்த நிலையில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் பாபு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அவர் மீது விரைவில் கைது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.