தமிழக செய்திகள்

செங்குன்றம் அருகே தண்ணீர் குழாய் பதிக்கும்போது கியாஸ் பைப் உடைந்தது

கியாஸ் நிறுவன ஊழியர்கள் கியாஸ் கசிவு ஏற்பட்ட குழாயை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

செங்குன்றத்தை அடுத்துள்ள சிருங்காவூரில் உள்ள மாகாளி அம்மன் கோவில் அருகே ஊராட்சி சார்பில் தண்ணீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. அப்போது அங்கு பதிக்கப்பட்டு இருந்த தனியார் நிறுவனத்தின் கியாஸ் குழாய் உடைந்தது.

கியாஸ் கசிவு

இதில் அந்த இடத்தில் இருந்து கியாஸ் கசிவு ஏற்பட்டு வெளியேறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கியாஸ் கசிந்த இடத்திற்கு பொதுமக்கள் வருவதை தடுக்கும் வகையில் தடுப்புகள் வைத்து தடுத்தனர்.

இதுதொடர்பாக கியாஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கியாஸ் நிறுவன ஊழியர்கள் கியாஸ் கசிவு ஏற்பட்ட குழாயை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

SCROLL FOR NEXT