பொதுப்பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது 10 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் ரெயில்ேவ போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சேலம் வழியாக தன்பாத்தில் இருந்து ஆலப்புழாவுக்கு தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் இன்று காைல வழக்கம் போல 7 மணியளவில் சேலத்திற்கு வந்து புறப்பட்டு சென்றது.
இந்த ரெயில் முன்னதாக பொம்மிடி முதல் சேலம் வரை சோதனை செய்த போது பின்புறம் உள்ள பொதுப்பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது 10 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் ரெயில்ேவ போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதே போல இன்று காலை சேலம் வழியாக சாலிமரில் இருந்து நாகர்கோவில் சென்ற குருதேவ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் போதை பொருட்கள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்தனர். ரெயில் பொம்மிடி- லோகூர் இடையே வந்த போது முன்பக்க பொதுப்பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பேக்கை கைப்பற்றி சோதனை செய்தனர்.
அதில் 6 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து அதனை சேலம் ஜங்சன் ரெயில்வே போலீசில் ஒப்படைத்த போலீசார் அந்த 2 ரெயில்களிலும் கடத்தி செல்லப்பட்ட கஞ்சா எங்கிருந்து யாருக்காக கடத்தி செல்லப்பட்டது என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.