தமிழக செய்திகள்

சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்கு- மேலும் 2 பேர் கைது

பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு.பழனிசெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

சவுக்கு சங்கர் தேனியில் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ சஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருந்த பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தேனியில் தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை போலீசார் வழக்கு தொடர்பாக கைது செய்தனர்.

சவுக்கு சங்கர் உடனிருந்த பிரபு, ராஜரத்தினம் ஆகியோரிடம் பழனிசெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.