தமிழக செய்திகள்

கடையில் சிகரெட் வாங்குவது போல் நடித்து மூதாட்டியிடம் 12 பவுன் நகை பறித்த கும்பல்

தகவலின் பேரில் வந்த போலீசார் அருகில் உள்ள வீட்டு சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை அமைத்து திருடனையும், அவனது கூட்டாளியையும் தேடி வந்தனர்.

மர்ம நபர்கள் 2 பேரும் செயினை பறித்துவிட்டு நெட்டூர் சாலையில் வரவே, அவர்களுடன் 3-வதாக மோட்டார் சைக்கிளில் நோட்டமிட்ட நபரும் ஏறிக்கொண்டு தப்பிச்சென்றனர்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பழைய பேரூராட்சி அலுவலகம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருபவர் மீனாட்சி (வயது 75).

நேற்று இரவு மூதாட்டி மீனாட்சி கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது ெஹல்மெட் அணிந்தபடி வந்த மர்ம நபர் ஒருவர், அதை கழற்றாமலேயே மூதாட்டியிடம் சிகரெட் கேட்டு நைசாக பேச்சு கொடுத்துள்ளார்.

மூதாட்டி

உடனே மூதாட்டியும் சிகரெட் கொடுக்கவே, மீதி சில்லறையை மூதாட்டி மீனாட்சி எழுந்து நின்று மர்ம நபரிடம் கொடுக்க முயன்றுள்ளார். அப்போது அந்த நபர், மூதாட்டியின் கழுத்தில் கிடந்த சுமார் ரூ.12 லட்சம் மதிப்பிலான 12 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு வேகமாக ஓடிச்சென்று, அருகே ஏற்கனவே மோட்டார் சைக்கிளில் காத்திருந்த தனது கூட்டாளியுடன் தப்பிச்சென்று விட்டார்.

மூதாட்டி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் வந்து மூதாட்டியை ஆசுவாசப்படுத்தினர். இந்த தகவலின் பேரில் வந்த ஆலங்குளம் போலீசார் அருகில் உள்ள வீட்டு சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை அமைத்து திருடனையும், அவனது கூட்டாளியையும் தேடி வந்தனர். இதனிடையே அந்த 2 பேரும் போலீசில் சிக்காமல் தப்பிக்க அவர்களது நண்பர் ஆலங்குளம் நெட்டூர் சாலையில் நோட்டமிட்டுக்கொண்டு நின்றுள்ளார். மர்ம நபர்கள் 2 பேரும் செயினை பறித்துவிட்டு நெட்டூர் சாலையில் வரவே, அவர்களுடன் 3-வதாக மோட்டார் சைக்கிளில் நோட்டமிட்ட நபரும் ஏறிக்கொண்டு தப்பிச்சென்றனர்.

போலீசார்

இதனிடையே வி.கே.புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உஷார்படுத்தப்பட்ட நிலையில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாச்சியார்புரம் விலக்கு டாஸ்மாக்கை கடந்து வீராணம் தான்தோன்றி அம்மன் கோவில் பகுதியில் 3 பேர் கும்பலும் சென்ற

போது அவர்களை அந்த ஊர்மக்களின் உதவியுடன் வி.கே.புதூர் போலீசார் மடக்கிப்பிடித்தனர். நகை பறித்த ஒரு மணி நேரத்தில் அவர்கள் பிடிபட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆவுடையானூரை சேர்ந்த ரமேஷ் என்ற சுபாஷ் (24), மேல அரியபுரத்தை சேர்ந்த அருண்கோபி (22), குத்துக்கல்வலசையை சேர்ந்த மாரிசெல்வம் (22) என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மூதாட்டியிடம் மர்ம நபர் நகை பறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வைரலாகி வருகின்றன.

SCROLL FOR NEXT