தமிழக செய்திகள்

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு ‘காந்தியடிகள் காவலர் விருது’ அறிவிப்பு!

அடுத்தாண்டு ஜன.26ம் தேதி காவலர்களுக்கு விருது வழங்கப்படும்.

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட ஐந்து காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி. சாய்பிரணீத், திருச்சி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ராமன், விக்கிரவாண்டி காவல் உதவியாளர் க.சண்முகம், திருப்பாதிரிபுலியூர் தலைமைக் காவலர் எ.கருணாகரன், கள்ளக்குறிச்சி மாவட்டம் மதுவிலக்கு அமலாக்கத்துறைப் பிரிவு தலைமைக் காவலர் பெ.செல்வம் ஆகிய 5 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2027ம் ஆண்டு குடியரசு தினத்தன்று, முதலமைச்சர் விஜய் இவர்களுக்கு விருதினை வழங்குவார். இவ்விருதுடன் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.40 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்படும்.

SCROLL FOR NEXT