தமிழக செய்திகள்

8 கிராம் தங்கம், பட்டுப்புடவை: அண்ணன் சீர் திட்டம் நிதி ஒதுக்கியாச்சு - எப்போது விண்ணப்பிக்கலாம்? - விரைவில் அறிவிப்பு

திட்டம் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் சமூக நலத்துறை மூலம் தனியாக வெளியிடப்படவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்ணன் சீர் திட்டத்தின் மூலம் மணப்பெண்களுக்கு 8 கிராம் தங்கம், பட்டுப்புடவை வழங்க தமிழக அரசு ரூ.812 கோடி ஒதுக்கியுள்ளது. ரூ.2.5 லட்சம் வருமான வரம்பு உள்ள குடும்பங்கள் மட்டுமே தகுதி பெறும். விண்ணப்பம் இணையதளம் மூலம் மட்டுமே செய்ய வேண்டும்; விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் அண்ணன் சீர் என்று திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டது.

அரசாணை

இதை அடுத்து தற்போது, தமிழக அரசின் அண்ணன் சீர் திட்டம் (Annan Seer Scheme) என்பது திருமணமாகும் மணப்பெண்களுக்கு அண்ணன் முறையில் சீர்வரிசை வழங்கும் நலத்திட்டத்திற்கு அக்டோபர் 5 ந்தேதி அன்று அரசாணை வெளியிட்டு உள்ளது.

அரசாணையில் இந்த திட்டத்தில் 8 கிராம் (22 காரட்) தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப்புடவை சீர் வரிசையாக வழங்கப்படும்.

இதற்காக இத்திட்டத்தின் முதற்கட்டச் செயலாக்கத்திற்காக தமிழக அரசு ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மணப்பெண்ணின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். (தேர்தல் வாக்குறுதியில் இது ரூ.5 லட்சமாக அறிவிக்கப்பட்டு, அரசாணையில் ரூ.2.5 லட்சமாக மாற்றப்பட்டுள்ளது)

இத்திட்டம் இந்த மாதம் 5 அல்லது அதற்குப் பிறகு நடைபெறும் திருமணங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

விண்ணப்பம்

இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இணையவழி (Online) மூலம் மட்டுமே பெறப்படும்.

இதற்கென பிரத்யேக இணையதளம் விரைவில் தொடங்கப்படும்.

இத்திட்டம் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் சமூக நலத்துறை மூலம் தனியாக வெளியிடப்படவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் நிதி ஒதுக்கிய நிலையில் இதற்கு விண்ணப்பம் செய்வது எப்படி என அரசு தரப்பில் இதுவரை தெரிவிக்கவில்லை.

இதனால் திருமணமாக இருக்கின்ற மணப்பெண்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியாத நிலையில் உள்ளார்கள்.

எனவே, விண்ணப்பிக்க இணையதள சேவையை முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க வேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்து வருகிறது.

SCROLL FOR NEXT