தமிழக அரசு 
தமிழக செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதி ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு

182 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை :

இந்த நிலையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களது குடும்பங்களின் துயர் துடைக்கும் வகையில் கொரோனா நோய் தொற்றில் உயிரிழந்தவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.50 ஆயிரம் நிவாரணத்தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி சென்னை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்துள்ள நபர்களின் குடும்பத்தினர் கொரோனா நோய் தொற்றினால் இறந்ததற்கான இறப்பு சான்றிதழ் வைத்திருந்தால் https://www.tn.gov.in இணையதளம் வழியாகவும், அருகில் இருக்கும் இ-சேவை மையங்கள் மூலமாகவும் நிவாரண தொகை பெற விண்ணப்பிக்கலாம்.