தமிழக செய்திகள்

கி. வீரமணி முதல் திருமாவளவன் வரை..! முதலமைச்சர் விஜயின் சந்திப்பு

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றதும் த.வெ.க. தலைவர் விஜய், அரசியல் தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறார்.

தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. தனித்து போட்டியிட்டது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, த.வெ.க., நாதக ஆகிய 4 முனை போட்டி நிலவியது. ஆனால், த.வெ.க. தலைவர் விஜய் இந்த தேர்தலில் தவெக- திமுக இடையில் மட்டும்தான் போட்டி என்றார்.

அவர் பேசிய பரப்புரைகளில் திமுக-வை கடுமையாக சாடினார். அதேவோல் விஜயை மாற்று கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர். தேர்தல் முடிவில் விஜயின் த.வெ.க. 108 இடங்களை பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

பின்னர் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விசிக, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிளின் ஆதரவுடன் ஆளுநரிடம் விஜய் மெஜாரிட்டியை காண்பித்தார். இதனால் நேற்று முன்தினம் விஜய் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார்.

விஜய்க்கு எதிராக திமுக, அதிமுக அதிக இடங்களுடன் எதிர்வரிசையில் அமர இருக்கின்றன. தேர்தலில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதால் எலியும் பூனையுமாக மோதிக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கி. வீரமணி

ஆனால், முதல் விஜய் அமைச்சர் விஜய் மூத்த தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் சந்திக்க முடிவு செய்தார்.

நேற்று சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றபின், பெரியார் திடல் வருகை தந்தார். அங்கு கி. வீரமணியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். பின்னர் பெரியல் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

2-வதாக முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு சென்றார். அவரை முன்னாள் துணை முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி கட்டித்தழுவி வரவேற்றார். பின்னர், மு.க. ஸ்டாலினை சந்தித்தார். அவரும் கட்டித்தழுவி வரவேற்றார்.

மதிமுக நிறுவனரும் பொதுச்செயலாளருமான வைகோ

3-வதாக மதிமுக தலைவர் வைகோ வீட்டிற்கு சென்றார். அவரை துரை வைகோ வரவேற்றார். வைகோ-வை சந்தித்து பேசினார். வைகோ அவருடைய குடும்பத்தினரை அறிமுகப்படுத்தி வைத்தார். அவருடைய வீட்டில் பணிபுரியும் பணிப்பெண்கள் விஜயை சந்தித்தனர். அப்போது ஒரு பெண் திருஷ்டி செய்து சுடக்கு விட்டது வைரல் ஆனது. முதலமைச்சர் விஜயும் திருஷ்டி செய்து சுடக்கு விட்டார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

4-வதாக பாமக தலைவர் அன்புமணி வீட்டிற்குச் சென்று அவரை சந்தித்தார். அப்போது சௌமியா அன்புமணி மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்தனர். குடும்பத்தினரை அறிமுகப்படுத்தி வைத்தார் அன்புமணி

சீமான்

5-வதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டிற்குச் சென்றார். அவரை சீமான் ஆரத்தழுவி வரவேற்றார். நினைவு பரிசு வழங்கினார். பின்னர் விஜய் தன்னுடைய பனையூர் அலுவலகத்திற்கு சென்றார்.

ஐயுஎம்எல் தலைவர்கள்

இன்று சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு முடிவடைந்ததும், 6-வதாக இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அலுவலத்திற்கு சென்றார். அங்கு அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை கொடுக்கப்பட்டனர். அந்த கட்சியின் தலைவர்களுடன் மரியாதை நிமித்தமாக பேசினார்.

காங்கிரஸ் தலைவர்கள்

7-வதாக சத்திய மூர்த்தி பவன் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவரை வரவேற்றார். மற்ற தலைவர்களையும் விஜய் சந்தித்தார்.

அதிமுக-வின் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி அணி

8-வதாக அதிமுக-வில் உள்ள சிவி சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையிலான குழுவினரை சந்தித்தார். அப்போது வேலுமணி அவரது அணியில் உள்ள எம்.எல்.ஏ.-க்களை அறிமுகம் செய்து வைத்தார்.

திருமாவளவன்

9-வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்தார். அப்போது முதலமைச்சர் விஜய்க்கு நினைவுப்பரிசு வழங்கினார் திருமாவளவன். பின்னர் வாசலில் இருவரும் கைகளை ஒன்றாக தூக்கிப்பிடித்து உற்சாகமாக மக்களை நோக்கி கை அசைத்தனர்.

அத்துடன் இன்றைய சந்திப்பு முடிவடைந்து பனையூர் அலுவலகத்திற்கு சென்று த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கிறது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பிறகு மற்ற சில தலைவர்களையும் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.