தமிழக செய்திகள்

இலவச மின்சாரம்... யாருக்கு எத்தனை யூனிட்கள் இலவசம்? - தமிழ்நாடு அரசு விளக்கம்

2.48 கோடி வீட்டு இணைப்புகளில் 2 கோடி இணைப்புகள் 500 யூனிட்டுக்கு கீழ்தான் மின்சாரத்தை பயன்படுத்துகின்றன.

தமிழ்நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள முதலமைச்சர் விஜய், இரு மாதங்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கான கோப்பில் தனது முதல் கையெழுத்தை இட்டுள்ளார். இத்திட்டத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் நிலவிவந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி இரு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகளுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு மட்டுமே இந்த 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த 200 யூனிட் இலவசச் சலுகை பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக அவர்களுக்கு 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற பழையை நடைமுறையே தொடரும்.

இதற்கு முன்பு தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது