தமிழக செய்திகள்

திண்டுக்கல்லில் பால் வேன் மோதி 4 சிறார்கள் உயிரிழப்பு

விபத்து தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வீட்டின் அருகாமையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது பால் வேன் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த கோர விபத்தில் 3 சிறுமிகள், ஒரு சிறுவன் உள்ளிட்ட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்தில் சிறுவன் மோசிகரன், சிறுமிகள் யோகவர்ஷினி, அனன்யா, தனு ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.