முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க. மருத்துவர் அணி செயலளாருமான டாக்டர். வேணுகோபால் அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தற்போதைய அ.தி.மு.க. தலைமை அனைவரையும் அனுசரித்து செல்லவில்லை. பட்டியல் சமூக மக்களிடம் அ.தி.மு.க. நம்பிக்கையை இழந்துள்ளது. தற்போது ஒரு குறிப்பிட்ட திசையை நோக்கி நகர்வதாக வேணுகோபால் குற்றம்சாட்டியுள்ளார்.
வேணுகோபால் 2017-ம் ஆண்டு அ.தி.மு.க.வின் பாராளுமன்ற குழு தலைவராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.