தமிழக செய்திகள்

ஆரம்ப சுகாதார நிலையம் முதல் சாலை விரிவாக்கம் வரை... தொகுதிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முன்னாள் அமைச்சர் மாதவரம் V மூர்த்தி

ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனையை மேம்படுத்துதல், தாரைப்பாலம் அமைத்தல், சாலை விரிவாக்கம், பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், மாதவரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் மாதவரம் V மூர்த்தியும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

முன்னாள் அமைச்சர் மாதவரம் V மூர்த்தி மற்ற வேட்பாளர்களை போல் வெற்றி பெற்று வந்தால் இதை செய்வோம், அதை செய்வோம் என்று மட்டுமே சொல்லி வாக்கு கேட்பதில்லை. அவர் சட்டமன்ற உறுப்பினர் முதல் (To) அமைச்சர் பதவி காலம் வரை தனது பதவிக்காலத்தில் ஏழை, எளிய மக்களுக்கு, விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு செய்த நலத்திட்டங்களை சொல்லி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தான்வெற்றி பெற்று வந்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நன்மை பயக்கும் வகையில் நலத்திட்டங்களை செய்வதாக உறுதிபட தெரிவிக்கிறார்.

இதனால் மாதவரம் தொகுதியில் அவரால் நன்மை அடைந்த மற்றும் அவர் மீது வைத்துள்ள பாசத்தால் மக்கள் அவரை வெற்றி பெற வைப்போம் என தெரிவிக்கின்றனர்.

மாதவரம் தொகுதியில் பம்மதுகுளம் ஊராட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்ட பணிகள் குறித்து பார்ப்போம்...

* பம்மதுகுளம் ஊராட்சியில் தரை பாலம் அமைக்கப்பட்டது.

* பம்மதுகுளம் அரசு பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக மாற்றியது.

பொத்தூர் ஊராட்சி

* நீண்ட நாள் கோரிக்கையான அரசு பேருந்து கிராமத்திற்குள் வர வைத்து தரப்பட்டது.

* பொத்தூர் கிராமம் முதல் ஆரிக்கமேடு வரை சாலை அமைத்தது.

வெள்ளானூர் ஊராட்சி

* ஆரிக்கமேடு பள்ளியை மேல் நிலை பள்ளியாக மாற்றியது.

* ஆரிக்கமேடு முதல் திருமுல்லைவாயல் வரை சாலையை விரிவாக்கம் செய்து தரப்பட்டது.

* கொள்ளுமேடு ஆரம்ப சுகாதார மருத்துவமனையை தரம் உயர்த்தி 30 படுக்கை வசதி உடன் மருத்துவமனையாக மாற்றியது.

* கொள்ளுமேடு அரசு பள்ளியை மேல்நிலை பள்ளியாக மாற்றியது.

மோரை ஊராட்சி

* புதிய கண்ணியம்மா நகருக்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைத்தல்.

* ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்தது.

* புதிய கண்ணியம்மா நகருக்கு பள்ளிக்கூடம் அமைத்து தந்தது.

* புதிய கண்ணியம்மா நகருக்கு சாலை வசதி.

அரக்கம் பாக்கம் ஊராட்சியில் தரை பாலம் அமைத்து தரப்பட்டது.

பாணிபேஸ்வரம் ஊராட்சியில் அரசு மேல்நிலை பள்ளிக்கூடத்திற்கு புதிய கட்டிடங்கள் கட்டி தரப்பட்டது.

வெள்ளச்சேரி ஊராட்சியில் தரைபாலம் அமைத்து தரப்பட்டது.

கரலப்பாக்கம் ஊராட்சியில் ஆரம்ப பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

ஆயாத்தூர் ஊராட்சியில் நீண்ட நாள் கோரிக்கையான பள்ளத்தும்பூர் சாலை அமைத்து தரப்பட்டது.

பாலவேடு ஊராட்சி

* ஆரம்ப பள்ளியை தரம் உயர்த்தி மேல்நிலை பள்ளியாக அமைத்தது.

* சாஸ்திரி நகருக்கு சாலை அமைத்து தரப்பட்டது.

* கரிமேடுக்கு சாலை அமைத்து தரப்பட்டது.

* அனைத்து ஊராட்சி கிராமத்திற்கும் நீண்ட நாள் கோரிக்கையான கிராம நத்தம் பட்டா வழங்கப்பட்டது.

இவ்வாறு ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனையை மேம்படுத்துதல், தாரைப்பாலம் அமைத்தல், சாலை விரிவாக்கம், பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை செய்துள்ளார்.