தமிழக செய்திகள்

முன்னாள் ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை அ.தி.மு.க.வில் இணைவு!

சட்டமன்ற தேர்தலில் 1048 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

ஓய்வுபெற்ற ஏ.டி.எஸ்.பி.,‘என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்’ வெள்ளதுரை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.

இதுதொடர்பாக கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில், நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டவரும், தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஒன்றியத்தைச் சேர்ந்தவருமான டாக்டர் S. வெள்ளைதுரை, Addl. Superintendent of Police (Retd.,) நேரில் சந்தித்து, தன்னை கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.

எனக் கூறப்பட்டுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில், சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்ட இவர், 1048 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

SCROLL FOR NEXT