தமிழக செய்திகள்

என்றும் அம்மாவின் நினைவில்..! முன்னாள் சபாநாயகர் தனபால் உருக்கமான பதிவு

தன்னுடைய அவிநாசி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது குறித்து தனபால் அதிருப்தி.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நினைவு கூர்ந்து முன்னாள் சபாநாயகர் தனபால் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

1988, சென்னையில் எனக்கு ஒரு சிறு விபத்து ஏற்பட்டு, கால் முறிவு ஏற்பட்டது. விபரம் அறிந்த மாண்புமிகு அம்மா, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, எனக்கு முதலுதவி அளிக்க ஏற்பாடு செய்து, மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தார்.

அம்மாவின் அன்பு! என்றும் அம்மாவின் நினைவில்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, தன்னுடைய அவிநாசி தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது குறித்து தனபால் நேற்று அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT