தமிழக செய்திகள்

அண்ணாமலையைத் தொடர்ந்து தனி இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்!

‘மக்கள் மேடை’ என்ற பெயரில் ஒரு புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் ‘மக்கள் மேடை’ என்ற பெயரில் ஒரு புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோக்கலாம்; ஒன்றாக இணைந்து ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து பல நல்ல காரியங்களைச் செய்வோம் என்று லதா ரஜினிகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த இயக்கத்தில் இணைய விரும்புவோர் 7550080515 என்ற அலைபேசி எண் அல்லது makkalmedaitain12@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்புகொள்ளலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றுகாலை பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலை ‘வீ தி லீடர்ஸ்’ ஒரு இயக்கத்தை தொடங்கிய நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக கூறிவிட்டு, பின்னர் உடல்நலக்காரணங்களால் அதிலிருந்து பின்வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.