தமிழக செய்திகள்

தோவாளை சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

கார்த்திகை தீப திருநாளையொட்டி பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

குமரி மாவட்டம் தோவாளையில் புகழ் பெற்ற மலர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த சந்தைக்கு ஆரல்வாய்மொழி, குமாரபுரம், பழவூர், மாடநாடார் குடியிருப்பு, ஆவரைகுளம் பகுதிகளில் இருந்து பிச்சிப்பூவும், மதுரை, மானாமதுரை, கொடைரோடு, திண்டுக்கல், சங்கரன்ேகாவில், கோவில்பட்டி, ராஜபாளையம் பகுதிகளில் இருந்து மல்லிகை பூவும் வருகின்றன.

ஆரல்வாய்மொழி

பெங்களூரூ, ஒசூர், ராயக்கோட்டை பகுதிகளில் இருந்து மஞ்சள் கிரேந்தி, பட்டர் ரோஸ், சேலத்து அரளி போன்ற பூக்களும், நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி, அம்பை, தென்காசி, ஆலங்குளம், புளியங்குடி பகுதிகளில் இருந்து பச்சை, துளசி, மரிக்கொழுந்து போன்ற பூக்களும் விற்பனைக்கு வருகின்றன. மேலும் ஆரல்வாய்மொழி, செண்பகராமன் புதூர், தோவாளை, ராம நாயக்கன் புதூர், தோப்பூர், குமாரபுரம் பகுதிகளில் இருந்து சம்பங்கி, அரளி, கோழிக் கொண்டை பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. இந்த பூக்களை தினமும் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமானோர் வந்து வாங்கிச் செல்கின்றனர்.

பண்டிகை

இந்த சந்தையில் பண்டிகை மற்றும் முகூர்த்த நேரங்களில் பூக்களின் விலை அதிகரித்து காணப்படும். அதன்படி நாளை (24-ந் தேதி) திருக்கார்த்திகை தீப திருநாளையொட்டி பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.1750க்கும், மல்லிகை பூ ரூ.1700-க்கும் விற்பனையானது. பட்டர் ரோஸ் ரூ.250, சேலத்து அரளி ரூ.350, மஞ்சள் கிரந்தி ரூ.110, சிவப்பு கேந்தி ரூ.120, வாடாமல்லி ரூ.100, கோழி கொண்டை ரூ.80, தாமரை ரூ.20க்கு விற்கப்பட்டது. இதேபோல் மற்ற பூக்கள் விலையும் உயர்ந்து காணப்படுகிறது

SCROLL FOR NEXT