மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கரையில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்.  
தமிழக செய்திகள்

உவரியில் நள்ளிரவில் மீனவர்கள் போராட்டம்- 2 அரசு பஸ்கள் சிறைபிடிப்பு

மீனவர்கள் ஆண்கள், பெண்கள் உள்பட சுமார் 500 பேர் அவ்வழியாக வந்த 2 அரசு பஸ்களை சிறை பிடித்து சாலை மறியல்.

சுருக்குமடி பயன்படுத்தி மீன் பிடிக்க அரசு அனுமதிக்க கோரி உவரியில் இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

நெல்லை மாவட்டம் உவரியில் சுருக்குமடி மூலம் பிடித்த மீன்களை கொண்டு செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் மறுத்ததால் மீனவர்கள் 2 அரசு பஸ்களை சிறை பிடித்தனர்.

சுருக்கு மடி மூலம் மீன் பிடிக்க அரசு தடை உத்தரவு அமலில் உள்ளது இந்த நிலையில் சுருக்கு மடியை பயன்படுத்தி உவரி மீனவர்கள் பிடித்த மீன்களை 50 மினி லாரிகளில் ஏற்றி விற்பனைக்கு கொண்டு செல்ல தயாராக இருப்பதாக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

சாலை மறியல்

அதன்பேரில் அங்கு சென்ற மீன்வளத்துறை அதிகாரிகள் மீன்களை விற்பனைக்கு கொண்டு செல்ல அனுமதி மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த மீனவர்கள் ஆண்கள், பெண்கள் உள்பட சுமார் 500 பேர் அவ்வழியாக வந்த 2 அரசு பஸ்களை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேஷ், திசையன்விளை தாசில்தார் ரமேஷ், மீன்வளத்துறை உதவி இயக்குனர் இளம்வழுதி, தூத்துக்குடி மீன்வளத்துறை உதவி இயக்குனர் புஷ்ராசப்னம், இணை இயக்குனர் இளம்வழுதி, உவரி இன்ஸ்பெக்டர் பிரேமா. திசையன்விளை இன்ஸ்பெக்டர் சுழில் சுரேஷ்சிங். உவரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்கண்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதைத்தொடர்ந்து நள்ளிரவு 1 மணி அளவில் சிறைபிடிக்கப்பட்ட பஸ்கள் விடுவிக்கப்பட்டது. இந்நிலையில் சுருக்குமடி பயன்படுத்தி மீன் பிடிக்க அரசு அனுமதிக்க கோரி உவரியில் இன்று மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

SCROLL FOR NEXT