தமிழக செய்திகள்

நெல்லை மாவட்ட மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

மாலை மலர்

தமிழகம் முழுவதும் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றானது மணிக்கு 40-45 கி.மீ முதல் அதிகபட்சமாக 55 கி.மீ வரை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

எனவே, திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.