வானிலை மாற்றம் காரணமாக கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் என மீன்வளத் துறை அறிவுறுத்தியது.
தென்கிழக்கு வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், தீவிர புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது புயலாக மாறினால் எண்ணூர், கடலூர் இடையே புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் புயல் உருவாக வாய்ப்புள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் தொடர்ந்து காணப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வானிலை மாற்றம் காரணமாக கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கரைக்கு திரும்ப வேண்டும் என மீன்வளத்துறை அறிவுறுத்தியது. இதனை தொடர்ந்து இன்று கடலூரில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க ெசல்லவில்லை. மேலும் தங்களது படகுகளை பாதுகாப்பாக கடலூர் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
அடுத்த உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன் படிக்க செல்லகூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.