தமிழக செய்திகள்

மதுரையில் ஜல்லிக்கட்டு அரங்கத்திற்கு வெளியே தீ விபத்து- போலீஸ் விசாரணை

மதுரையில் அரங்கத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வந்தது.தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்கத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அரங்கத்தின் அருகில் இருந்த பணியாளர்கள் தங்கும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதுகுறத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும், ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வந்த மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT