தமிழக செய்திகள்

பைனான்சியர் வீட்டில் 15 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி திருட்டு- வாலிபர் கைது

போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

தலைமறைவாக உள்ள 2 பேரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை மேற்கு மாம்பலம், பாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் தனது வீட்டின் கீழே தரைதளத்தில் பைனான்ஸ் அலுவலகம் வைத்து நடத்தி வருகிறார். மேல்தளத்தில் உள்ள வீட்டை புனரமைப்பு செய்து வருவதால் வேல்முருகன் கடந்த சில மாதங்களாக அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு இடம் மாறினார்.

கொள்ளை

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கடந்த 3-ந் தேதி அவரது வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து படுக்கையறை லாக்கரில் வைத்திருந்த 15 பவுன் நகை, 5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.20 ஆயிரத்தை சுருட்டிக் கொண்டு தப்பிவிட்டனர்.

போலீசார்

தகவல் அறிந்து வந்த அசோக் நகர் குற்றப்பிரிவு போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அம்பத்தூர் பகுதியை சேர்ந்த அஸ்வின் (வயது 23) என்பவர் தனது கூட்டாளிகள் 2 பேருடன் மோட்டார் சைக்கிளில் வந்து வேல்முருகன் வீட்டில் கைவரிசை காட்டியது தெரிந்தது. தொடர்ந்து அஸ்வினை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 கிராம் நகை பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள 2 பேரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT