தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, தொழிலதிபர் மற்றும் ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த நியமனத்திற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இவர் கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு நெருங்கியவர் என்றும், காவேரி, மேகதாது பிரச்னை சென்றுக்கொண்டிருக்கும்போது, இவரை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது கண்டனத்திற்க்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஐடி விங், கர்நாடக காங்கிரஸ் அரசின் Proxy Government-ஆக செயல்படுகிறதா தவெக அரசு? என கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னதாக இவர் முதலமைச்சர் விஜய் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க கோரியபோது உடனிருந்து சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.