போக்குவரத்து நெரிசல் 
தமிழக செய்திகள்

தொடர் விடுமுறை - நேற்று இரவு முதல் இன்று காலை வரை கடும் போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று முன்னதாகவே அறிந்த தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார், செங்கல்பட்டு டோல்கேட் வரை கூடுதலாக போக்குவரத்து போலீசார் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தொடர் விடுமுறை காரணமாக 10 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் ஜி எஸ் டி சாலையை கடப்பதால் நேற்று இரவு முதல் இன்று காலை வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

போக்குவரத்து நெரிசல்

விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இருக்கக்கூடிய தென் மாவட்ட, வட மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு கார், இருசக்கர வாகனங்கள், குடும்பமாக தனியார் வேன் மற்றும் அரசு பேருந்து, ஆம்னி பேருந்து என புறப்பட்ட லட்சக்கணக்கான வாகனங்களால் பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி டோல்கேட் வரை வாகனங்கள் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

10 லட்சம் வாகனங்கள்

தினசரி வண்டலூர், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி, ஜிஎஸ்டி சாலையில் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வாகனங்கள் பயணித்தால் நேற்றைய தினம் இரவு 7 மணி முதல் இன்று காலை எட்டு மணி வரை 10 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் கடந்து சென்றுள்ளதாகவும் வாகனங்கள் ஊர்ந்து செல்லத்தக்க போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இது போன்று போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று முன்னதாகவே அறிந்த தாம்பரம் மாநகர போக்குவரத்து போலீசார் இதற்காக வண்டலூர், கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில், மகேந்திரா சிட்டி, செங்கல்பட்டு டோல்கேட் வரை கூடுதலாக போக்குவரத்து போலீசார் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் கனரக வாகனங்களை ஜிஎஸ்டி சாலை வழியாக அனுமதியும் மறுக்கப்பட்டது. அப்படி இருந்தும் 10 லட்சத்துக்கு மேலான வாகனங்கள் ஒரே நேரத்தில் கடந்து சென்றதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT