மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தவெக எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனையை தொங்கினார்.
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் விஜய் பல்வேறு அறிவுரைகளை வழங்குவதுடன் சில அமைச்சர்கள் மற்றும் சில எம்.எல்.ஏ.க்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை மாமல்லபுரம் நட்சத்திர விடுதியில் நடைபெறுள் கூட்டத்தில் இருந்து தவெக பெண் எம்எல்ஏக்கள் மட்டும் புறப்பட்டனர்.
கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பெண் எம்எல்ஏக்கள் மட்டும் புறப்பட்டனர். முதலில் பெண் எம்எல்ஏக்களிடம் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்திய நிலையில் அவர்கள் புறப்பட்டனர்.
எம்எல்ஏக்கள் காமாட்சி, சிந்து, தாகிரா, கனிமொழி, குழந்தை ராணி உள்ளிட்டோர் புறப்பட்டனர்.