தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக தவெக செய்தித் தொடர்பாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார். பணி நியமனத்திற்கான ஆணையை பெற்றநிலையில் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார் ஃபெலிக்ஸ்.
இவர் இந்தப் பதவியில் 3 ஆண்டுகள் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளரான ஃபெலிக்ஸ் ஜெரால்டு, சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் தமிழக வெற்றிக் கழகத்தின் தீவிர செய்தித் தொடர்பாளராகச் செயல்பட்டு வந்தவர்.
சிறுபான்மையின மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாத்தல்.
அரசின் நலத்திட்டங்கள் சிறுபான்மையினரைச் சென்றடைவதைக் கண்காணித்தல்.
அவர்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான ஆலோசனைகளையும் பரிந்துரைகளையும் அரசுக்கு வழங்குதல்.
தவெக செய்தித் தொடர்பாளர்களுக்கு அரசுத் துறைகளில் பதவிகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.