தமிழக செய்திகள்

மின்சாரம் தாக்கி தந்தை, மகன் பலி: முதலமைச்சர் நிதியுதவி அறிவிப்பு

குடும்பத்திற்கு ஆறுதல் தெரித்த முதலமைச்சர் ஜோசப் விஜய் ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

திருவாரூர் புதூரில் மின்சாரம் தாக்கி உயிழந்தவரகள் குடும்பத்திற்கு முதலமைச்சர் விஜய் ரூ.6 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

விவசாய கூலி வேலைக்காக நிலத்தில் உழுது கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி தந்தை ராஜா, மகன் ஆதித்யன் உயிரிழந்தனர்.

குடும்பத்திற்கு ஆறுதல் தெரித்த முதலமைச்சர் ஜோசப் விஜய் ரூ.6 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருவாரூர் மாவட்டம், புதூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதித்யன் (வயது 21), த/பெ. ராஜா மற்றும் ராஜா (வயது 49) த/பெ. அருணாச்சலம் ஆகியோர் கடந்த 5.10.2026 அன்று விவசாயக் கூலி வேலைக்காக நஞ்சை நிலத்தில் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தபோது, அழுத்த மின்பாதை மின்கம்பத்தில் உயர் டிராக்டர் எதிர்பாராதவிதமாக 'வீ கிராசாரம்' மின்கம்பியுடன் டிராக்டர் மீது விழுந்ததில், டிராக்டர் ஓட்டிக்கொண்டிருந்த ஆதித்யன் மீது மின்சாரம் பாய்ந்ததோடு, அருகில் வேலை செய்துகொண்டிருந்த அவரது தந்தை ராஜா, இவரைக் காப்பாற்ற முயன்றபோது அவர்மீதும் மின்சாரம் பாய்ந்ததில், இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

மோதியதில் மின்கம்பத்தில் இருந்த இச்சம்பவத்தில் உறவினர்களுக்கும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT