மதுரை கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் மூர்த்தியை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு உடை அணிந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தின்போது அவர் கூறியதாவது:-
சங்கி கூட்டத்தின் கலவர சதியை முறியடித்தவர்கள் மதுரை மக்கள்.
பாசிச பாஜகவால் தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது.
பாசிஸ்ட்டுகளுக்கும், அடிமைகளுக்கும் ஏப்ரல் 23ம் தேதி சரியான பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.