தமிழக செய்திகள்

விவசாயிகளுக்கு 80% சதவீதம் பயிர் கடன் தள்ளுபடி - அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார்

சிறு குறு விவசாயிகளுக்கு 80% சதவீதம் பயிர் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

தமிழக மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சரான சி.டி.ஆர். நிர்மல்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

“த.வெ.க தேர்தல் வாக்குறுதியான விவசாய கடன் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 14,96,000 பயிர் கடனில் 14,22,000 ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் 80 சதவீதம் விவசாயிகள் பயனடைகிறார்கள். இதனால் தமிழக அரசுக்கு ரூபாய் 2044 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் வகையில் எந்த சம்பவமும் தமிழகத்தில் நடைபெறவில்லை. போதைப் பொருட்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

எங்கெல்லாம் தவறு நடக்கிறதோ அந்த தவறுகள் உடனடியாக சரி செய்யப்பட்டு கைது நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று ஒரு பார் உள்ளே பொதுமக்கள் சென்று, பார் அனுமதியின்றி எப்படி திறந்தீர்கள் என்று கேட்டுள்ளார்கள். அவர்கள் தவெக நிர்வாகிகள் கிடையாது.

ரேஷன் கடைகள் டாஸ்மாக் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் மிகவும் உரிமையாக, இந்த அரசு இப்படி தான் செயல்பட வேண்டும் என்று நேராக சென்று பார்க்கிறார்கள். அது ஆரோக்கியமான நல்ல விஷயம் தான்” என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT