தமிழக செய்திகள்

விஷம் கலந்த கேக் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற குடும்பம்- இருவர் உயிரிழப்பு

மன வேதனையில் இருந்த சகாயம் செபஸ்டின் கேக்கில் விஷம் கலந்து குடும்பத்தினருக்கு கொடுத்தார். தாய் மற்றும் மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாலை மலர்

சென்னை பெரம்பூரில் விஷம் கலந்த கேக்கை சாப்பிட்டு 2 பேர் உயிரிழந்தனர். 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சகாயம் செபஸ்டின் என்பவரின் மனைவி பியூலா புற்றுநோயால் பாதிப்பட்டார். இதன் காரணமாக மன வேதனையில் இருந்த சகாயம் செபஸ்டின் கேக்கில் விஷம் கலந்து குடும்பத்தினருக்கு கொடுத்தார்.

கேக்கை சாப்பிட்டு 2 பேர் உயிரிழந்தனர். தாய் மற்றும் மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த இருவரின் உடலை கைப்பற்றி பெரம்பூர் செம்பியம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.