பத்திரப்பதிவு 
தமிழக செய்திகள்

பொதுமக்களுக்கு நற்செய்தி: நாளை ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பத்திரப் பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள்!

ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 16 தட்கல் டோக்கன்கள் வழங்கப்படும்.

ஆவணி அவிட்டம் மற்றும் பவுர்ணமி தினமான 27-ந் தேதி அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை தலைவரால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் அறிவிப்பு

சுபமுகூர்த்த மற்றும் விசேஷ தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது ஆவணி மாதத்தில் வரும் ஆவணி அவிட்டம் மற்றும் பவுர்ணமி தினமான 27-ந் தேதி (நாளை) அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அலுவலக வாரியாக டோக்கன் விவரங்கள்

ஒரு சார்பதிவாளர் அலுவலகங்கள்: வழக்கமாக வழங்கப்படும் 100 டோக்கன்களுக்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்.

இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்கள்: வழக்கமான 200 டோக்கன்களுக்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும்.

அதிக பதிவு நடைபெறும் 100 அலுவலகங்கள்: 100 சாதாரண முன்பதிவு டோக்கன்களுக்கு பதிலாக 150 சாதாரண டோக்கன்கள் வழங்கப்படும்.

ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 16 தட்கல் டோக்கன்கள் வழங்கப்படும்.