சூளைமேடு, நமச்சிவாயபுரம் பகுதியை சேர்ந்தவர் லோகேஸ்வரன். ஆன்லைன் செயலி மூலம் பைக்டாக்சி ஓட்டி வருகிறார். இந்த நிலையில் சூளைமேட்டில் இருந்து தி.நகர் செல்வதற்காக கே.கே நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் தேவா என்பவர் செயலியில் முன்பதிவு செய்தார்.
இதையடுத்து லோகேஸ்வரன் தனது மோட்டார் சைக்கிளில் தேவாவை ஏற்றிக் கொண்டு சென்றார். அப்போது ‘நண்பர் ஒருவர் பணத்துடன் வந்து கொண்டு இருக்கிறார் எனவே “கூகுள் பே” மூலம் ரூ.1400 அனுப்பினால் நான் ரூ.2ஆயிரமாக தருகிறேன்” என்று தேவா கூறினார்.
இதை உண்மை என்று நம்பிய லோகேஸ்வரன் கூகுள்பே மூலம் தேவாவுக்கு பணத்தை அனுப்பினார். அந்த நேரத்தில் அவ்வழியே வந்த ஆட்டோ ஒன்றில் திடீரென தாவி குதித்து தேவா தப்பினார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த லோகேஸ்வரன் தனது மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றார். சைதாப்பேட்டை அருகே ஆட்டோவை வழிமறித்து நிறுத்தியபோது மற்றொரு ஆட்டோவில் தேவா தாவி ஏறினார். உடனே லோகேஸ்வரனும் தனது மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு அதே ஆட்டோவில் ஏறினார். அசோக் நகர் 2-வது அவின்யூ பகுதியில் ஆட்டோ நின்றபோது தேவாவும், அங்கு வந்த அவரது நண்பரும் கத்திமுனையில் மிரட்டி ேலாகேஸ்வரனை தாக்கி விரட்டி அடித்தனர்.
இது குறித்த புகாரின்பேரில் அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து தேவா, அவரது நண்பர் சிலம்பரசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.