தமிழக செய்திகள்

பிளஸ்-2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு நடைபெறுகிறது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 8-ந்தேதி வெளியிடப்பட்டது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு 94.56 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்த நிலையில் இந்த ஆண்டு 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வுக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க தனித்தேர்வர்கள், பள்ளி மாணவர்களிடம் இருந்து நேற்று வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

தற்போது தேர்வர்களின் நலன் கருதி இன்றும், நாளையும் (4-ந்தேதி) அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறப்பு அனுமதி திட்டத்தில் (தட்கல் முறையில்) விண்ணப்பிக்கவும் நாளை வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.