தமிழக செய்திகள்

எழும்பூர், தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் 12 சிறப்பு ரெயில்கள் நீட்டிப்பு

வியாழக்கிழமை தோறும் இயக்கப்படும் நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயில் மற்றும் தாம்பரம்-நெல்லை சிறப்பு ரெயில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரெயில்வே, பயணிகள் நெரிசலை குறைக்க 12 சிறப்பு ரெயில்களை நீட்டித்துள்ளது. தாம்பரம்-போடிநாயக்கனூர், நெல்லை-தாம்பரம், திருவனந்தபுரம்-தாம்பரம் உள்ளிட்ட ரெயில்கள் நவம்பர் 14 மற்றும் 15-ந்தேதி வரை இயக்கப்படும்.

பயணிகள் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக 12 எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே நீட்டித்து உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

சிறப்பு ரெயில்கள்

தாம்பரம்-போடிநாயக்கனூர் இடையே சனிக்கிழமை தோறும் இயக்கப்படும் சிறப்பு ரெயில் நவம்பர் 14-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

போடிநாயக்கனூர்-தாம்பரம் இடையே ஞாயிற்றுக்கிழமை தோறும் இயக்கப்படும் சிறப்பு ரெயில் அடுத்த மாதம் 15-ந்தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

வியாழக்கிழமை தோறும் இயக்கப்படும் நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயில் மற்றும் தாம்பரம்-நெல்லை சிறப்பு ரெயில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் - தாம்பரம் இடையே வியாழக்கிழமை இயக்கப்படும் சிறப்பு ரெயில் எழும்பூர்- கன்னியாகுமரி, கன்னியாகுமரி-எழும்பூர், எழும்பூர்-கொல்லம், கொல்லம்-எழும்பூர், கொல்லம்-சென்னை சென்ட்ரல் உள்ளிட்ட 12 ரெயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT