தமிழக செய்திகள்

பட்டாசு கிடங்கில் வெடி விபத்து- இருவர் உயிரிழப்பு

வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் கண்ணன் மற்றும் விஜய் என தெரியவந்துள்ளது.விபத்தில் , 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாலை மலர்

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே தனியார் பட்டாசு கிடங்கில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி இரண்ட பேர் உயிரிழந்துள்ளனர்.

வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் கண்ணன் மற்றும் விஜய் என இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெடி விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.