தமிழக செய்திகள்

அமைச்சர் வன்னி அரசின் சகோதரிக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - ஒருவர் உயிரிழப்பு!

அமைச்சர் வன்னி அரசின் சகோதரி தலைமறைவாக உள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒத்தையால் உள்ள “சின்னத்தம்பி பைரோடெக்ஸ்” என்ற பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில், மீனம்பட்டியைச் சேர்ந்த மாடசாமி (33) என்ற தொழிலாளி உயிரிழந்தார்.

வேதிப்பொருட்களைக் கலக்கும் அறையில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த விபத்து நேரிட்டதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆலை தமிழ்நாடு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசுவின் சகோதரி எம். ஜெயலட்சுமி என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

போலீஸ் நடவடிக்கை

இதனைத்தொடர்ந்து சாத்தூர் தாலுகா போலீசார், அமைச்சர் வன்னியரசுவின் சகோதரி ஜெயலட்சுமி, அவரது மகள் செல்வமாரி, மகன் முரளீஸ்வரன் மற்றும் ஆலை மேற்பார்வையாளர் சூர்யபிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதில் மேற்பார்வையாளர் சூர்யபிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மற்ற மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

நிவாரணம்

இதனிடையே உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் ரூ.4 லட்சம் நிதியுதவி மற்றும் இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT