தமிழ்நாடு செய்திகள்

ஜாபர் சாதிக் கைது- பிரத்யேக வீடியோ வெளியீடு

ஜாபர் சாதிக்கிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஜாபர் சாதிக், அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுத்திருப்பது விசாரணையில் அம்பலம்.

மாலை மலர்

போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜாபர் சாதிக்கிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜாபர் சாதிக், அரசியல் கட்சிகளுக்கு பணம் கொடுத்திருப்பது போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 

போதை பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் மங்கை திரைப்படம் எடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜாபர் சாதிக்குடன் இருந்த திரைப்படத் துறையை சார்ந்த பிரபலங்களின் விவரங்களும் கிடைத்துள்ளதாக என்.சி.பி அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை என்.சி.பி அலுவலகத்திற்கு அழைத்து வந்த பிரத்யேக வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.