தமிழக செய்திகள்

‘தலைமைச் செயலாளரால்கூட முதலமைச்சரை தொடர்புகொள்ள முடியவில்லை’ - திமுக பரந்தாமன் விமர்சனம்!

கிரிக்கெட் ஸ்கோர் மாதிரி, இன்னைக்கு கொலைகளுடைய எண்ணிக்கை அதிகமா இருக்கு.

சென்னையில் தி.மு.க. சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.,

தலை தீபாவளி

பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் பேசின பேச்சு, எழுதி வைத்துக்கொள்ளுங்கள்: “ஆறு மாசத்துல சட்டம் ஒழுங்கை நாங்க எப்படி தூக்கி நிப்பாட்டிடுவோம்னு, இந்த ஆறு மாசம் தவெக-வினுடைய ஆட்சி, நேற்றைக்கு நடந்த தீபாவளி பண்டிகைதான் ஒரு பெரிய சாட்சி.”

இப்ப கூட நான் வந்து உங்களை சந்திக்கிறதுக்கு வரும்போதுகூட தொலைக்காட்சியில பார்த்தேன். தலை தீபாவளியை கொண்டாடிட்டு முதலமைச்சர் விஜய் இப்பதான் வந்து சீப் செக்ரட்டரியையும் டிஜிபி கிட்டயும் ஒரு ரிவ்யூ பண்ணிட்டு இருக்கிறார்.

இந்த ஆட்சியின் முதல் தீபாவளி, அதனால தலை தீபாவளின்னு சொன்னேன்; உடனே விர்ச்சுவல் வாரியர்ஸ் கிளம்பி வந்துராதீங்க. எங்களுடைய எதிர்க்கட்சித் தலைவர் சொன்ன மாதிரி, இந்த பண்டிகை நாள்ல பட்டாசு சத்தத்தை விட பட்டா கத்தி சத்தம்தான் அதிகமா கேட்டுருக்கு.

ஒரே நாளில் 17 கொலைகள்

தமிழ்நாட்டில பண்டிகை தினத்தன்று மட்டும் 17 கொலைகள் நடந்திருக்கு. இத பற்றி கேட்டா. . சட்டவிரோத சம்பவங்கள் பண்டிகை காலங்கள்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும்னு—யார் சொல்றாரு? நம்ம ஸ்டாண்ட்அப் காமெடியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் சொல்றார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன் அவர்களே, தீபாவளி பண்டிகை அன்னைக்கு நீங்க பேசுற சிறப்பு பட்டிமன்றத்துல உங்க இஷ்டத்துக்கு பேசுறதுக்கு இப்ப நீங்க அமைச்சர் ஆட்சியில் இருக்கீங்க.

பண்டிகை நாட்கள்லதான் , காவல்துறை ரொம்ப அதிகமா விழிப்போடு இருக்கணும். ஆனா இந்த பண்டிகை நாட்கள்ல வியாபாரம் குறைஞ்சிருக்குது, வரலாறு காணாத அளவுக்கு கொலைகள் அதிகரிச்சிருக்குது.

கிரிக்கெட் ஸ்கோர் ஏறும். 6, 8, 9 ரன், 10 ரன் அப்படி எகிறும். அந்த மாதிரி பண்டிகை காலமான நேற்று மட்டும் 9, 10, 13, என நைட் 17 வரைக்கும் போய் எகிறுது. கிரிக்கெட் ஸ்கோர் மாதிரி, இன்னைக்கு கொலைகளுடைய எண்ணிக்கை அதிகமா இருக்கு.

Sleep Mode

ஹாலிவுட் படத்துல 'தி பர்ஜ்' (The Purge) அப்படின்னு ஒரு படம் இருக்கு. அந்த படத்துல ஒரு நாள் லீவு விட்டுருவாங்க. சட்டம் ஒழுங்க பத்தி கவலைப்பட மாட்டாங்க. போலீஸ் கண்டுகாது, அரசாங்கம் கண்டுக்காது; யார் வேணா எந்த குற்றச் சம்பவத்துலயும் ஈடுபடலாம், அது யாருமே கேட்க முடியாது.

அப்படித்தான் முதலமைச்சர் விஜய் அவர்களே, தீபாவளி பண்டிகை அன்னைக்கு ஒரு நாள் நீங்க Sleep Mode போயிட்டு எந்த அதிகாரியுமே வந்து முதலமைச்சரைத் தொடர்பு கொள்ள முடியலையா.? அந்த ஸ்லீப் மோட்ல போயிட்டு, இந்த போர்ஜ் ஹாலிவுட் திரைப்படம் மாதிரி, இன்னைக்கு தமிழ்நாட்டுல 17 சம்பவங்கள் நடந்திருக்கு.

இன்னைக்கு 17 பேர் கொலை செய்யபட்டுள்ள செய்தி வந்திருக்கு, இப்போ வரைக்கும். CM சார், பேப்பர் படிக்கிறீங்களா சார்? மூணு நாளா பேப்பர் படிச்சீங்களா சார்? எங்க சார் இருந்தீங்க மூணு நாளா? உங்க சீப் செக்ரட்டரி உங்களைத் தொடர்பு கொள்ள முடியலன்னு தகவல் வருது எங்களுக்கு. உங்க டிஜிபி உங்களைத் தொடர்பு கொள்ள முடியலன்னு தகவல் சார்.

காலையில 10 மணிக்கு வந்து, சாயங்காலம் 5 மணிக்கு போகுற ஸ்கூல் சில்ட்ரன் வேலை இல்லை முதலமைச்சர் வேலை. ரவுண்ட் தி கிளாக் (Round the clock) 24/7 தேவைப்படுறீங்க.

உருட்டுக்கட்டை புரட்சி

நீங்க ஒரு விரல் புரட்சி பண்ணி படத்துல வந்து பெருசா சீன் எல்லாம் போட்டீங்க. படத்துல ஒரு விரல் புரட்சி, உங்க ஆட்சியில உருட்டுக்கட்டை புரட்சி... 'கத்தி' படத்துல தண்ணிக்கு வாய் கிழிய பேசி சண்டை போட்டீங்க, தண்ணி கேட்டு வந்தார் ஒருத்தர் .. சாமானியர். உங்க துணை சபாநாயகர் வீட்டுல தண்ணி காட்டிட்டீங்க, அது ரொம்ப வேதனையா இருக்குது.

ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியோட வீட்டுல வாக்களிச்சவர்—அது உங்களுக்கு வாக்களிச்சவங்க, நான் விஜய் அண்ணாக்குதான் ஓட்டு போட்டேன்னு சொல்றார்.

உங்களுக்கு வாக்களிச்சவர் வந்து தண்ணி வரலன்னு சொல்ல, பண்டிகை காலத்துல ஒரு வீட்ல தண்ணி வரலன்னா ஒரு சாதாரண குடும்பத்துல எவ்வளவு சிரமப்படுவோம்?

நீங்க மிட்டா மராசுதாருங்க. உங்களுக்கு ஜெனரேட்டர் இருக்கும், உங்களுக்கு மோட்டார் இருக்கும். உங்க துணை சபாநாயகர் டபுள் தண்ணில இருப்பாரு. நான் குடிக்கிற தண்ணியைச் சொல்றேன்; ஒரு டேங்குக்குப் பதிலா ரெண்டு டேங்கு, டபுள் தண்ணில இருப்பாரு. ஏன்னா, அதனால உருட்டுக்கட்டையை அடிக்க வராருல?

அப்போ ஒரு அடிப்படைப் பிரச்சினையைப் பத்தி பேசுறதுக்கு ஒரு சாதாரண சாமானியன் வரும்போது, அதை அணுகுகிற ஒரு பக்குவம் கூட இந்த ஆளுகிற ஆட்சியாளருக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு இல்லன்னா, இந்த தமிழ்நாட்டுல ஆட்சிதான் நடக்குதா இல்லை ஜங்கிள் ராஜ், காட்டாட்சி நடக்குதா?

தமிழ்நாட்டில இன்னைக்கு Gun Culture நடக்குது. இப்போ வேலூர் மாவட்டத்துல குடியாத்தத்துக்கு பக்கத்துல பாமக பிரமுகர் ஒருத்தரை துப்பாக்கியால சுட்டுருக்காங்க. துப்பாக்கி கலாச்சாரம் அதிகமா இருக்கு. ஜங்கிள் ராஜ், தமிழ்நாட்டில ஜங்கிள் ராஜ் நடக்குது, காட்டாட்சி நடக்குது.

இந்த சட்டம் ஒழுங்க பத்தி பார்த்துக்கிறதுக்கு ஒருவேளை ஆபீசர் இன்காம்பிடெண்ட்டாக இருக்காங்களா அல்லது முதலமைச்சர் இன்காம்பிடெண்ட்டாக இருக்கிறாரா என்ற ஒரு சந்தேகம் எல்லாருக்கும் இருக்கு.” என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT