காவல்துறை மானியக்கோரிக்கை மீது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளிக்கவில்லை என்று எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று சர்காரியா அறிக்கை தொடர்பாக முதலமைச்சர் விஜய் பேசியது குறித்து அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்ததை தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவைக்காவலர்கள் மூலம் சபையில் இருந்து தி.மு.க. வினர்கள் உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த கே.என்.நேரு கூறுகையில்,
தி.மு.க.வை அசிங்கப்படுத்தும் நோக்கில் பொய்யான செய்திகளை சினிமா பாணியில் முதலமைச்சர் பேசினார். அமலாக்கத்துறை பற்றி முதலமைச்சர் பேசிய நிலையில் பதிலளிக்க எங்களுக்கு அனுமதி தாருங்கள் என சபாநாயகரிடம் கேட்டோம். அதற்கு நாங்கள் பதில் சொல்லும் முயலும்போது எங்களை அவையில் இருந்து வெளியேற்றி இருக்கிறார்கள் என்றார்.
தி.மு.க. கொறடா எ.வ.வேலு கூறுகையில்,
* எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் பதிலளிப்பார் என எதிர்பார்த்தோம்.
* காவல்துறை மானியக்கோரிக்கை மீது எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் விஜய் பதிலளிக்கவில்லை.
* மிசாவைப் பற்றி பேசிய போது முதலமைச்சர் விஜய் வெளிப்படுத்திய மோசமான உடல்மொழியை எல்லோரும் பார்த்திருப்பீர்கள்.
* மிசாவில் சிறை சென்ற முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தியாகத்தை கொச்சைப்படுத்தியுள்ளனர்.
* முரசொலி மாறன் குடும்பத்தினரிடம் பணம் வாங்கி படம் நடித்த முதலமைச்சர் அவரை ஏன் கொச்சைப்படுத்தினார்?
* பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்குக்கு வழி சொல்கிறார் முதலமைச்சர் விஜய்.
* பெண் மாற்று தலைவரே இதுவரை இல்லை என்று ரீல்ஸ் போடுவதற்காக சத்யபாமாவை சபாநாயகர் இருக்கையில் அமரவைத்தனர் என்றார்.